அன்னப்பறவை -ஜகதீஷ் கண்ணா

(இக்கதையின் ஒலிப்புத்தக வடிவத்தை இங்கு கேட்கலாம்.)

https://www.flickr.com/photos/wackybadger
https://www.flickr.com/photos/wackybadger

எல்லாருக்கும் வணக்கம்.

ஒரு குழந்தை ஒன்னு, ரெண்டு விஷயத்துக்கு அழுதா பரவா இல்ல, ஆனா ஒவ்வொரு விஷயத்துக்கும் அழுதா என்னங்க பண்ணுவீங்க?

இப்படித்தான் ஒன்னும் சொல்ல முடியாம முழிச்சாங்க என் அம்மா அப்பா. அந்த குழந்தை வேறு யாரும் இல்லைங்க நான்தான். அப்பொ எனக்கு நாலு வயசு. எங்க வீட்ல பாத்தீங்கன்னா இரண்டு பேர். நானும் என் அக்காவும். இரண்டு பேரும் இரண்டு துருவங்கள் மாதிரி. எப்படின்னா, அவ காலைல எழுந்ததும் அம்மாவ பார்த்து சிரிப்பா, நான் அழுவேன். அப்டியே பிரஷ் எடுத்துட்டு பாத்‌ரூம் போவா, என் அம்மா பிரஷ் எடுத்துட்டு என் பின்னாடி ஓடி வருவாங்க.  அப்படி ஓட ஆரம்பிச்சா ஒரு இரண்டு மூன்று ‘ரௌண்டு’ சலிக்காம ஓடுவேன். அப்படி என்ன துரத்தி துரத்தியே குஷ்பு மாதிரி இருந்த என் மம்மி த்ரிஷா மாதிரி ஆய்ட்டாங்கன்னா பார்த்துக்கங்க. அப்படியே என்ன துரத்திப்பிடிச்சா நான் திரும்ப அழ ஆரம்பிச்சிடுவேன். அப்படியே அழுதுட்டே பாத்‌ரூம் போய், குளிச்சி, சாப்பிட்டு… இப்படி ஓவ்வொரு விஷயத்துக்கும் அழுதா ஒரு மம்மி எனங்கா பண்ணுவாங்க? பாவம்… இதுல அவங்களுக்கு ஆபீஸ் டென்ஷன் கூட.

என்ன கன்ட்ரோல் பண்றதுக்கு என் பேரென்ட்ஸ் பட்ட பாடு, அய்யயோ சொல்லி தெரிய வேண்டியதில்லை. திட்டி திட்டி என் அப்பாவுக்கும் போர் அடிச்சிடுச்சு. அடிச்சு பார்த்தும் ப்ரயோஜனம் இல்லை. ஒரு லெவெலுக்கு மேல குழந்தைய அடிக்க எந்த பாரெண்ட்சுகுத்தான் மனசு வரும்? இந்த டகால்டி எல்லாம் என்ன ஸ்கூல் சேர்க்கறவரைக்குதான். ஏன்னா 8.30-கெல்லாம் ரெடி பண்ணி ஸ்கூல் பஸ்ல ஏத்தி விடனும், ஆனா அது முடியவே இல்லைங்க… அம்மா அப்பா பயங்கரமா ப்ளானிங் எல்லாம் பண்ணாங்க, ஒண்ணும் வேலைக்கு ஆகலை. ரொம்ப யோசனைக்கு அப்புறம் ஒரு சொல்யூஷன் கண்டுபிடிச்சார் என் அப்பா. அவர் கண்டுபிடிச்சசொல்யூஷண் என் பாட்டி.

என் பாட்டி…
அவங்க வீட்டுக்கு வரவரைக்கும் எப்படி இருந்தேனோ தெரியாது,. ஆனா அவங்க வந்தததுக்கு அப்புறம் எல்லாமே மொத்தமா மாறிப்போச்சு. அவங்க வந்த முதல் நாள், இன்னும் ஞாபகம் இருக்கு.

வழக்கம் போலத்தான் அழுதுட்டே எழுந்தேன். வீட்ல புதுசா பாட்டிய பார்த்ததும் என் அழுகை இன்னும் அதிகம் ஆகிடிச்சு. எப்பவும் நாங்கதான் வருஷத்துக்கு ஒருவாட்டி பாட்டி வீட்டுக்குப்போவோம். இப்ப என்னடா அவங்க இங்கன்னு… வழக்கம் போல பல் விளக்க என் மம்மி என் கூட ஓடிபிடிச்சு விளையாட வேண்டியதாப்போச்சு. குளியல் அதை விட மோசம். அடுத்து சாப்பாடு.

என் பேரென்ட்ஸ் முகம் கோவத்துல சிவந்து இருந்துச்சு. என்னடா பண்றதுன்னு என் அப்பா அம்மா இரண்டு பேரும் தலைல கை வைத்து உட்கார்ந்துட்டாங்க. அப்பொ என் அம்மா பாட்டிகிட்ட,” ஐயோ ஸ்கூல் பஸ் வர டைம் ஆகிடுச்சு, இவன எப்படி சாப்பிடவச்சி கிளப்புரதுன்னே தெரியல… ஏதாவது பண்ணுங்க அத்தை. இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு.”

அப்பதாங்க என் பாட்டி முகத்த பார்த்தேன். நான் இவ்ளோ பிரச்சனை பண்ணதுக்கு அப்புறமும் என் அப்பா அம்மா மாதிரி கோபம் என் பாட்டி முகத்துல இல்லை. அவங்ககிட்ட இருந்தது ஒரே ஒரு எக்ஸ்ப்ரெஷன் தான். புன்னகை. ஆமாம், அழகான ஒரு புன்னகை. அதுவே ஏதோ எனக்கு வித்தியாசமா  தெரிஞ்சது.

“நீங்க ரெண்டு பேரும் உங்க வேலையப்பாருங்க, தலைவர நான் பார்த்துக்கறேன். கொஞ்ச நேரம் நீங்க இந்த பக்கம் வராதீங்க,” அப்படீன்னு என் பாட்டி என் அப்பா அம்மா கிட்ட சொல்லி அனுப்பிட்டு, சாப்பாட்டு தட்டோட என் முன்னாடி வந்தாங்க.

“கண்ணா இங்க பார்…” நான் அழுதுட்டே, தலைய ஆட்டி, முடியாதுன்னு சொன்னேன்.

பாட்டி புன்னகையோட, “இங்க பார் கண்ணா இப்போ பாட்டி உனக்கு ஒரு கதை சொல்லப்போறேன், என்ன ஓகே-வா?” அப்படின்னு சொன்னதும் நான் என்னடா ஏதோ புதுசா சொல்றாங்களேன்னு அழுகைய நிறுத்திட்டு அவங்க முகத்த பார்த்தேன்.

“ஆனா அந்த கதை காேட்கண்ணும்னா கண்ணை மூடித்தான் கேட்கனும்.”

நான் அவங்க முகத்த ஒரு கேள்வியோட பார்த்துட்டு திரும்ப அழ ஆரம்பிக்கப்போக, பாட்டி என்னைப் பார்த்து, “சரி போ உனக்கு கதையும் கிடையாது, சாப்பாடும் கிடையது,” அப்டீன்னு சொன்னாங்க.

எப்பவும் நான் தான் சாப்பாடு வேணாம்னு சொல்லுவேன், அம்மா என் பின்னாடி ஓடி வருவாங்க, இப்போ என்னடான்னா எல்லாமே ரிவர்ஸ்ல நடக்குது.

சரின்னு நானும் கண்ண மூடிட்டு உக்கார்ந்தேன். பசி!

என் பாட்டி கதை சொல்ல ஆரம்பிச்சாங்க.

“ஒரு ஊர்ல, ஒரு பெரிய காடு இருந்துச்சாம். அங்க, ஒரு குட்டிப் பையனும் அவங்க அம்மா, அப்பவும் இருந்தாங்களாம். அந்த குட்டிப் பையன் தான் நீ. அந்த குட்டிப் பையன் டெய்லி காலைல எழுந்ததும் காட்டுல வாக்கிங் போவானாம். வாக்கிங் போகும் பாதை பச்ச பசேல்னு அழகான புல்வெளியாம். பக்கத்துலயே ஒரு ஜல்-ஜல்னு ஸௌன்டோட ஆறு ஓடிட்டு இருந்துச்சாம். கண்ணா புல்வெளி தெரியுதா?”

“ம்ம்ம்”

திடீர்னு மேலேர்ந்து ஒரு அன்னப்பறவை பறந்து கீழ வந்து, அந்த பையன் கைய பிடிச்சுட்டு மேல பறக்க ஆரம்பிச்சுதான்… தீடிர்னு பறவைக்கு தாகம் எடுக்குது. என்ன பண்றதுன்னு தெரியாம அது கடவுளை வேண்டுச்சாம். உடனே கடுவுள் மழை வரவழைச்சுட்டாராம். உடனே பறவை ஆ காட்டி தண்ணி குடிச்சிததாம்.”

உனக்கு தாகமா இல்லையான்னு கேட்டாங்க… நானும் ஆ காட்டினேன். பார்த்தா என் வாய்ல ஒரு சாப்பாட்டு உருண்டை வந்து விழுந்தது. வேற வழி முழுங்கித்தானே ஆகணும். அப்படியே கதைய கன்டிந்யூ பண்ணி ஃபுல் தட்டையும் காலி, அதாவது ரெண்டு இட்லி, பண்ணிட்டாங்க.

அதற்க்கப்புறம், அவங்க கதை சொல்லி சாப்பிட்ரதுன்னு ட்ரைன் ஆயிடுச்சு. அழுகை இல்லை. டெய்லீ ஒரு கதை. சில நேரம் பெரிய கதையா இருந்தா பாதியில் நிக்கும். அடுத்த நாள் கன்டிந்யூ பண்ணுவோம்.  இப்டியே, பாட்டி வடை சுட்ட கதைலேர்ந்து, தெனாலிராமன், ராமாயணம், மஹாபாரதம், விக்ரமாதித்தன், அக்பர் பீர்பால்-னு எல்லா கதையும் சொன்னானங்க.

அப்போ மஹாபாரதத்த்துல கர்ணன் கதை சொல்லிட்டு இருந்தாங்க. இந்த மஹாபாரதத்துலயே எனக்கு பிடிச்ச ஒரு கேரக்டேர் கர்ணன். கர்ணன் ரொம்ப நல்லவன். எல்லாருக்கும் நல்லது மட்டும் தான் பண்ணுவான்… க்ரிஷ்ணர் பொய்யா வேசம் போட்டுக்கிட்டு கர்ணனோட கவச குண்டலத்தை வாங்கிட்டார்னாங்க. நான் அழுகிற மாதிரி ஆயிட்டேன். அடுத்த நாள் போர். நான் அழுவது மாதிரி இருபதைப் பார்த்துட்டு, “சரி போர்ல என்ன ஆச்சுன்னு நாளைக்கு சொல்றேன்,” அப்டீன்னாங்க.

அய்யயோ, கர்ணன் என்ன பண்ண போறான்னு ஸ்கூல்ல ஒரே யோசனை. அப்புறம் ஈவினிங் ஆர்வமா ஸ்கூல் விட்டதும், ஹோம்வர்க் எல்லாம் சீக்கிரமா முடிச்சி, தினமும் 8 மணிக்கு சாப்பிட உட்காரும் நான் அன்னைக்கு 7 மணிக்கே ரெடி.

“பாட்டி, வாங்க சாப்பிடப் போகலாம். அந்த கர்ணன் கதை கடைசியா என்ன ஆச்சுன்னு இன்னிக்கு சொல்லனும்…” நாலஞ்சுவாட்டி கூப்பிட்டேன். ஆனா என் பாட்டி எழுந்துக்கவே இல்லை.

“அம்மா பாருங்க பாட்டி எந்திரிக்கமாட்டேணுங்கறாங்க.”

பாட்டியோட கை கால் எல்லாம் ஜில்லுனு இருந்துச்சு. அம்மா வந்து பார்த்துட்டு என்ன வேற ரூமுக்கு அனுப்பிச்சிட்டாங்க. அதான் என் பாட்டி எனக்குக் கடைசியா சொன்ன கதை.

இது நடந்த போது எனக்கு 11 வயசு இருக்கும். அப்புறம் அந்த கர்ணன் கதை முடிவு என்னாச்சுன்னு புக்ல படிச்சி நானே தெரிஞ்சிகிட்டேன்.

அப்டியே நாட்கள் நகர ஆரம்பிச்சது. இன்னிக்கு வரைக்கும் அவங்கள ரொம்ப மிஸ் பன்றேங்க. இப்ப கூட டெய்லீ சாப்பிட போகும் போது ஒரு நொடிக்காவது மனசுல அவங்க முகம் வந்துட்டு போகும்.

நான் படிச்சு டிக்ரீ வாங்கிட்டேன். சின்ன வயசுலேர்ந்து என் கனவெல்லாம் பைய்லட் ஆகணும்ங்ரது. அந்த அன்னப்பறவை கதை கேட்டதாலயோ என்னவோ! டிக்ரீ முடிச்ச உடனே  ஆர் போர்சுக்கு அப்ளை பண்ணேன். மைய்சூர்ல இன்டர்‌வ்யூ.

எனக்கு மைசூரில் யாரையும் தெரியாது. அக்கா கல்யாணம் ஆகி  பங்களூரில்  இருந்தாங்க. இன்டெர்வியூக்கு இரண்டு நாள் முன்னாடியே அங்க போயிட்டேன். மாமா ஆஃபீஸ் போய் இருந்தார், ப்ரியா குட்டி ஸ்கூல். ஜூநியர் LKG-ல இருக்கா. நான் தூங்கி 7 மணி போல எழுந்தேன். மாமா, ப்ரியா இரண்டு பேரும் வீட்ல இருந்தாங்க. 8 மணிக்கு சாப்பாடு ரெடீ. சாப்பிட கூப்பிட்டாங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேங்க்கான்னு சொல்லிட்டு இன்டர்‌வ்யூகுப் படிக்க ஆரம்பிச்சேன். டைம் போனதே தெரியல. திடீர்ன்னு அக்கா சத்தம் போட்றது கேட்டது.

“ப்ரியா குட்டி! பாரு, மாமா சாப்பிட வரமாட்டேங்கறான். வர சொல்லு!” நான் போகாமல் படிச்சிட்டிருந்தேன். அக்கா தட்டில் சாப்பாடு போட்டு, நான் உட்கார்ந்திருந்த எடத்துக்கே கொண்டுவந்துட்டாங்க.

“உங்க மாமா சாப்பாடறது உன் பொருப்பு,” அப்டீனு ப்ரியாகிட்ட சொல்லிட்டு பொய்ட்டாங்க. ப்ரியா, நான் சாப்பிட ஆரம்பிக்காததை பார்த்து, “இங்க பாருங்க மாமா, சீக்கிரம் சாப்பிடுங்க நான் தட்டு கொண்டுபோய் அம்மாகிட்ட குடுக்கணும்” -னு சொன்னா.

அப்புறம், கண்ணை மூடுங்கன்னு சொன்னா. கண்ணை மூடினேன். “ஒரு ஊர்ல ஒரு பெரிய காடு இருந்துச்சாம். அங்க ஒரு குட்டிப் பையனும் அவங்க அம்மா அப்பவும் இருந்தாங்களாம்…”  அப்படியே ஆ காட்ட சொல்லி குட்டி சாப்பாட்டு உருண்டையை என் வாய்க்குள்ள போட்டு சாப்பிட வெச்சா. என் பாட்டி என் கண் முன்னாடி நின்னுட்டு இருந்தாங்க.

என் கண் கலங்கி இருந்தத பார்த்துட்டு, “காரமா இருக்கா மாமா? இந்தாங்க தண்ணி குடீங்க”-ன்னு குடுத்தா. அப்புறம் அவ தூங்க போயிட்டா. அடுத்த நாள் நான் இண்டர்வ்யூக்குக்கிளம்பி போயிட்டேன்.

இண்டர்வ்யூல ஸெலெக்ட் ஆன 3 பேர்ல நானும் ஒருத்தன். ஸெலெக்ட் ஆன மூணு பேரையும் ஹெலிக்காப்டர்ல கூட்டிட்டு போனாங்க. ஆமாம், அன்னைக்கு நான் பறவைகளோட உண்மையிலேயே பறந்துட்டு இருந்ததேன்.

 

இப்ப கூட பாருங்க, நான் உங்களுக்கு கதை சொல்லும் நேரத்துல, இங்குதான் எங்கோ நின்று என் பாட்டி என்னை பார்த்து சிரிச்சிட்டுருக்காங்க.

 

 

 

Copy of IMG_0126

ஜகதீஷ் கண்ணா ஒரு நாடக ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார்.

Cover photo: https://www.flickr.com/photos/wackybadger