க்ரேசி time with god

“சாக்லேட் கிருஷ்ணா” நாடகம் எழுதத் தூண்டலாய் இருந்த கல்கி கேள்வி-பதில் “கிரேசியைக் கேளுங்கள்”.
ஒரு வாசகர் கேட்டிருந்தார், “கடவுள் உங்களைப் பேட்டி (ஸெல் ஃபோனில்) எடுத்தால் என்ன பேசுவார்? பதிலுக்கு நீங்கள் என்ன பேசுவீர்கள்?”

Crazy time with God

க்ரேசி மோகன்

cell ringing…

நான்: ஹலோ யாரு?
கடவுள்: நான்தான் god
நான்: சர்வீஸுக்கு ஏன் வரல… aqua-guard தானே?
கடவுள்: aqua-god, mud-god, wind-shield, fire-proof….இப்படி பஞ்ச பூதமும் நான்தான்!
நான்: (நக்கலாக) வெங்கடாசலபதியா?
கடவுள்: phoneல நான் halloபதி…
நான்: ராங் நம்பர்.!
கடவுள்: but right member… நீ crazy… நான் gracy….
நான்: எப்படி நம்பறது.?
கடவுள்: நம்பறவனுக்குத்தான் என் நம்பர் வரும். நம்பினாத்தான் நான். நம்பாட்டி நீ. cellலுல என்ன நம்பர் display ஆயிருக்கு பாரு…
நான்: (பார்த்து) My god!
கடவுள்: கூப்பிட்டியா?
நான்:அதில்ல… என்னய்யாது நம்பருக்கு பதிலா infinityனு வந்திருக்கு…
கடவுள்: நீ பண்ணா எனக்கு zeroன்னு வரதே. கத்திக்கு கத்தி டைப் நான் இல்ல.கத்திக்கு கருணை. zeroக்கு infinity.
நான்: (தயக்கமாக) நீ… இல்ல நீங்க… உங்களுக்கு ஏது cell?
கடவுள்: உன்னோட ஒவ்வொரு ஸெல்லுலையும் நான் இருக்கேன்… (மனைவி வர) Mrs.டு call வராங்க…
நான்:அடியே… ஸெல்லுல கடவுள் பேசறார்…
மனைவி: கார்த்தால ஷேவ் பண்ணிக்க பிளேடு இல்லேன்னு நீங்க குதியா குதிச்சேளே? அப்ப இந்த ஆசாமி போன் பண்ணி என்ன வரம் வேணும்னு கேட்டான். நான் ச’வரம்’னு சொல்லி போனை கட் பண்ணிட்டேன்.
நான்: அடிப்பாவி புருஷன நம்பி அரசனை கட் பண்ணிட்டியே…
மனைவி: (கிண்டலாக) எனக்கு ஸெல்லரிக்குதுங்க… நான் மாஞ்சு மாஞ்சு கிருஷ்ண ஜெயந்திக்கு கால் போட்டு வராத கடவுள் உங்களுக்கு call போட்டு பேசறாராக்கும்… பேசறது god இல்லீங்க எவனோ fraud….சரி சரி நான் கிருஷ்ணர் கோயிலுக்கு போயிட்டு வரேன்… நீங்க உங்க கடவுளோட குலாவுங்க… (போகிறாள்)… (திரும்பி வந்து) மறந்துட்டேன்! (என்று சொல்லி முகவாய் கட்டையை தோளில் இடித்துக் கொள்கிறாள்)
கடவுள்: (சிரித்து) mannerism மாதிரி இது நான் பெண்களுக்காக  படைத்த womenerism…
நான்: (ஆச்சரியாமாக) ஸெல்லுல பாக்க முடியுதா?
கடவுள்: உன்னுது டூப்ளிகேட் ஸெல். என்னுது அஸெல்.
நான்: கடவுளே உங்க பேர் என்ன?
கடவுள்: படைக்கறச்சே preபேர். காக்கறச்சே repபேர்.
நான்: அழிக்கறச்சே.
கடவுள்: உம்பேர்.
நான்: உங்களை படைச்சது யாரு? ஐ மீன் அப்பா அம்மா?
கடவுள்: கிடையாது…
நான்: அனாதையா?
கடவுள்:அனாதி.
நான்: நல்லவங்களை சோதிக்கறே; கெட்டவங்களை வுட்டுடறியே ஏம்பா?
கடவுள்: கஜானாவத்தான் சோதிப்பாங்க… காலி டப்பாவையா?
நான்: கல்கி அவதாரம் ஏன் இன்னும் எடுக்கலை?
கடவுள்: மாசாமாசம் எடுக்கறேன். கலைச்சுடறாங்களே. கருவிலே கலைந்தார் கல்கி.
நான்: நீ ஹிந்துவா? முஸ்லீமா? கிருஸ்துவனா?
கடவுள்: மூவருக்கும் சமனம்.
நான்: அப்ப இந்த மும்மூர்த்திகள்?
கடவுள்: தெனாலி ராமன், முல்லா நஸருதீன், பீர்பால்… சைத்தான் பகைச்சுவையை அழிக்கும் நகைச்சுவைகள்…
நான்: போதி மரத்தடில குந்தினா நிர்வாணம் கிடைக்குமா?
கடவுள்: பாத்-ரூம்லயே கிடைக்குமே! க’போதி’.
நான்: சாவு வராம இருக்க என்ன வழி?
கடவுள்: ஏன் இருந்து மத்தவங்க உசுரை வாங்கறதுக்கா?
நான்: நேரடியா பதில் சொல்ல மாட்டேங்கறியே…
கடவுள்: cellலுல மறைமுகமாத்தானே பேசிகிட்டுருக்கோம்.
நான்: அப்ப நேர்ல வா!
கடவுள்: ஓகே வந்தாச்சு.
நான்: கண்ணுக்கு தெரியலையே?
கடவுள்: நீயே உன் கண்ணுக்கு தெரியாத போது, நான் எப்படி தெரிவேன்?
நான்: கண்ணாடில பாத்தா தெரிவேனே!
கடவுள்:அப்ப கண்ணாடில பாரு.
நான்: (கண்ணாடியில் பார்க்க ஒன்றும் தெரியாமல் அதிர்ந்து) அய்யோ நான் எங்கே?
கடவுள்: பயப்படாதே. உன் பிம்பத்தை நான் மறைச்சுண்டுருக்கேன். பிரதி பிம்பம் இதான்.
நான்: நீ மந்திரவாதியா?
கடவுள்: மந்திரத்துக்கு மயங்கும் பிரதிவாதி. நான் உளனெனில் உளன். இலனெனில் இலன்.
நான்: ஆத்திகம், நாத்திகம் எது உன்னை அடையறதுக்கு பெஸ்ட்?
கடவுள்: naughtyகம்… கம்னு கிட… சாட்சி பூர்வமா சும்மா இருத்தல் சு’கம்’!
நான்: அப்ப நீ எதுக்கு?
கடவுள்:மூதேவி இதை மொதல்லயே கேட்டுத் தொலைச்சுருக்கறதுதானே… என்னோட pre-paid cardஐ வேஸ்ட் பண்ணிட்டியே. எல்லா கடவுளுக்கும் வாகனம் உண்டு. உங்களோட வாகனம் கடவுள். மேல பாரத்தை போட்டுட்டு நிம்மதியா சவாரி பண்ணுங்க. நான் கொடுத்த free-will… driving… சத்தியம், தர்மம் சிக்னலுக்கு கட்டுப்பட்டு காலத்தை ஓட்டினீங்கன்னா, you will reach the destination without any accident.
நான்: எப்படி சொல்ற?
கடவுள்: அனுபவத்துலதான்.
நான்: அனுபவம்னா?
கடவுள்: நானும் உன்னை மாதிரி மனுஷனா இருந்துதான் கடவுளானேன். போறுமா? ”மனுஷன் தெய்வ ரூபேண”. ஆMEN!

crazy23
Photo credit: www.crazymohan.com

க்ரேசி மோகன் அவர்கள் ஓர் பிரபலமான தமிழ் நகைச்சுவை நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்.