பூனைகள்

- நடராஜன் வேங்கடசுப்ரமணியன்

இக்கவிதையின் ஒலிப்புத்தக வடிவத்தை இங்கு கேட்கலாம்

பூனைகள் மீது எங்களுக்கு
யாதொரு வன்மமும் இல்லை
அவற்றின் மட்டமான வாசனையையும்
உதிரும் ரோமங்களையும்
நம்பகமில்லாத விசுவாசத்தையும்
மிகையான ஈஷலையும்
அழுகை போன்ற ’மியாவ்’களையும்
நாங்கள் பொருட்படுத்துவதில்லை

ஆனால் எங்களுக்கு அவற்றின்
மீதொரு வருத்தம் உண்டு

எம்மைவிட பெண்களுக்கு அவை
விருப்பமானவையாக இருப்பதால்.

திருநெல்வேலியைச் சார்ந்த நடராஜன் ஒரு மெக்கானிக்கல் பொறியாளர் ஆவார். தற்போது பெங்களூரில் வேலை பார்கிறார்.